முகப்பு News பிரபல பாடகி கணவனால் படுகொலை?

பிரபல பாடகி கணவனால் படுகொலை?

பாடகி பிரியானி ஜயசிங்க கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவருடைய பாணந்துறையில் உள்ள வீட்டில் வைத்து அவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவரை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஒரு ஜோடி கத்தரிக்கோலும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த கொலையுடன், அவரது கணவனுக்கு தொடர்புள்ளதாக சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், சந்தேக நபர் தலைமறைவாகி இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், சந்தேக நபராக கணவரை கைது செய்யவதற்காக நடவடிக்கைகளை பாணந்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com