பிரபல பாடகர் மற்றும் நடிகர் ரோனி லீச் காலமானார்

பிரபல பாடகர் மற்றும் நடிகர் ரோனி லீச் தனது 65 ஆவது வயதில் அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுலா ஒன்றிணை மேற்கொண்டிருந்த வேளையில் உயிரிழந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு இன்று மீண்டும் நாடு திரும்ப இருந்த போதே அவர் உயிரிழந்துள்ளார்.

மாரடைப்பு ஏற்பட்டதனை அடுத்து அவரை மீண்டும் தங்கியிருந்த விடுதிக்கு அழைத்து சென்ற சந்தர்ப்பத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக, இலங்கை பாடகர்கள் சங்கத்தின் தலைவர் கீர்த்தி பெஸ்குவல் தெரிவித்துள்ளார்.

அவரின் சடலத்தை சில நாட்களுக்குள் நாட்டிற்கு எடுத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அவருடைய இறுதிக் கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]