பிரபல நடிகை ஸ்ரீதேவி திடீர் மரணம்! தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இரங்கல் !!

ஸ்ரீதேவி

பிரபல நடிகை ஸ்ரீதேவி திடீர் மரணம்! தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இரங்கல் !!

பிரபல நடிகை ஸ்ரீதேவி (54) நேற்று துபாயில் மரணமடைந்தார். அவரது திடீர் மறைவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது .

புகழ் பெற்ற நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு அகால மரணம் அடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. பல்வேறு மொழிகளில் 300 -க்கும் அதிகமான படங்களில் கதாநாயகியாக நடித்து பல வருடங்களாக தனது புகழை நிலை நாட்டியவர் ஸ்ரீதேவி. சிறந்த தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்தவர்.

2013-ல் இந்திய அரசு அவருக்கு ‘பத்மஸ்ரீ ‘ பட்டம் அளித்து கௌரவித்தது. தனது இயல்பான நடிப்பு திறனால் ரசிகர்கள் மனதை கவர்ந்த அவரது திடீர் மரணம் ,

இந்திய திரைப்பட துறைக்கு ஈடு செய்ய இயலாத மாபெரும் இழப்பாகும். அவரது பிரிவால் துக்கத்தில் ஆழந்துள்ள அவரது குடும்பம் மற்றும் உறவினர்களுடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், அனைத்து உறுப்பினர்களும் துக்கத்தில் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம் ”

-தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]