பிரபல நடிகையின் முகத்தை குதறிய நாய்- முகத்தில் 12தையல்களுடன் வைத்தியசாலையில் அனுமதி!!

பாலிவுட் சினிமாவில் படங்களை தாண்டி பல சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ரீனா அகர்வால்.வெள்ளித்திரையில் அதிகமான படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும் சின்னத்திரை சீரியல்கள் பலவற்றில் தோன்றி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் இவர்.

இவர் சமீபத்தில் Kya Haal Mister Panchal என்ற சீரியலுக்காக நாய் வைத்து படப்பிடிப்பு நடத்தி வந்திருக்கிறார். திடீரென்று அந்த நாய் அவரின் முகத்தை மோசமாக கடித்துள்ளது.இது எதிர்பாராமல் நடந்த விபத்து என படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.மேலும் அந்த நாய் ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரிடமும் நன்றாகத்தான் பழகி கொண்டிருந்தது.மேற்கொண்டு என்ன பிரச்சனை நடந்தது என்பது தெரியவில்லை.

இதனால் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரீனாவிற்கு முகத்தில் 12 தையல்கள் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் இவரைமருத்துவர்கள் அவரை ஒரு மாதத்திற்கு ஓய்வு எடுக்க கூறியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]