பிரபல நடிகர்களின் நஷ்டம் தந்த படங்கள்,விபரங்களுடன்

பிரபல நடிகர்களின்சினிமா மக்கள் மனதில் அழுத்தமான இடத்தை பதித்த பொழுதுபோக்கு.
எந்த சூழ்நிலையிலும் இந்த பொழுதுபோக்கு கைவிடப்பட்டது இல்லை. ஆனாலும் இந்த பொழுதுபோக்குக்கு பெரும் நஷ்டங்கள் வருவதுண்டு. திருட்டு விசிடி மற்றும் ஒன்லைன் மூலமாக பார்ப்பதில் இந்த பொழுதுபோக்குக்கு கிடைக்கும் வசூல் குறைகிறது.ஒரு பக்கம் பிரபல நடிகர்கள் நடித்த படங்களும் தோல்வி அடைவதும் உண்டு. முன்பு போல் இவர்களின் படங்களும் வெற்றி அடைவது இல்லை.

பிரபல நடிகர்கள் நடித்த படங்களும் அதிக நஷ்டத்தை கொடுத்து உள்ளது. அதில் சில படங்களின் விபரங்கள் கீழே பட்டியல்படுத்தபட்டுள்ளது.

மாற்றான் – சூர்யாவின் திரைப்பயணத்தில் பெரும் தோல்வி. அஞ்சான்  படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு செம்ம வசூலை ஓப்பனிங்கில் பெற்றது, அதனால், ஓரளவிற்கு குறைந்த நஷ்டம் தான். ஆனால் மாற்றான் பெரும் பொருட் செலவில் வெளிவந்த படம். அதனால் என்னவோ இப்படம் நஷ்டக்கணக்கில் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.

10 எண்றதுக்குள்ள – விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்த்தது. கந்தசாமி, தாண்டவம், பீமா என பல படங்கள் தோல்வியடைந்தாலும் 10 எண்றதுக்குள்ள தான் சமீபத்தில் அவரின் மிகப்பெரும் நஷ்டமடைந்த படம்.

தங்கமகன் – தனுஷிற்கு தங்கமகன், சிம்புவிற்கு AAA ஆகிய படங்கள் பெரும் நஷ்டத்தை கொடுத்த படங்கள். இவை அனைத்துமே நடிகர்கள் கடந்த சில வருடங்களில் மட்டும் கொடுத்த தோல்வியை வைத்து கூறப்பட்டுள்ளது.

உத்தம வில்லன் – கமலை பொறுத்தவரையில் சமீப காலமாக சிறு பட்ஜெட் படங்களில் தான் நடித்து வருகின்றார், அப்படியிருந்தும் அவர் மிகவும் ரிஸ்க் எடுத்தது உத்தம வில்லனில் தான், இப்படம் சொன்ன தேதியில் வந்திருந்தாலே ஓரளவிற்கு வசூல் வந்திருக்கும், ஆனால், ஒரு நாள் கழித்து இப்படம் ரிலிஸானது பெரும் நஷ்டத்தை கொடுத்தது.

பில்லா-2 – அஜித்தை பொறுத்தவரையில் கடைசியாக விவேகம் கூட தமிழகத்தில் நஷ்டம் தான் என கூறப்படுகின்றது, ஒரு சில பகுதிகளில் முதலுக்கு மோசமில்லை என்கின்றனர், இருந்தாலும் பெரியளவில் இப்படம் நஷ்டம் இல்லை, ஆனால், அஜித் நடிப்பில் மிக பிரமாண்டமாக வெளிவந்து பெரிய நஷ்டத்தை கொடுத்த படம் பில்லா-2 தான்.

சுறா – விஜய் நடிப்பில் வெளியான சுறா பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திய படமாகும்.

லிங்கா – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வந்த கபாலி கூட தமிழகத்தில் எதிர்ப்பார்த்த வசூல் இல்லை தான், இருந்தாலும் சமாளிக்கக்கூடிய நஷ்டம் தான் ஏற்பட்டது, ஆனால், லிங்கா தான் ரஜினியின் திரைப்பயணத்திலேயே பெரும் நஷ்டத்தை கொடுத்த படம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]