முகப்பு Cinema பிரபல நடிகருடன் ஜோடி சேரும் ரெஜினா

பிரபல நடிகருடன் ஜோடி சேரும் ரெஜினா

பிரபல நடிகருடன் நடிகை ரெஜினா ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கார்திக் மற்றும் அவருடைய மகன் சேர்ந்து நடித்த மிஸ்டர் சந்திரமௌலி படத்தை அடுத்து ராஜபாண்டி இயக்க இருக்கும் புதிய படத்தில் பிரபல நடிகருடன் ரெஜினா.ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார்.

‘என்னமோ நடக்குது’, ‘அச்சமின்றி’ படங்களை இயக்கியவர் ராஜபாண்டி அடுத்ததாக இயக்கும் படத்தில் அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ரெஜினா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கதையை கேட்ட ரெஜினாவும் தனது கதாபாத்திரம் வித்தியாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு இது நல்ல பெயரை பெற்றுத் தரும் என்று இயக்குனருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் ஏ.வி.எம் ஸ்டூடியோவில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு அடுத்த மாதம் சென்னையில் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com