பிரபல நடிகருடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்

பிரபல நடிகருடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழில் தற்போது அதிக படங்களை நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

‘செக்க சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் தற்போது ‘வடசென்னை’ திரைப்படம் உருவாகியுள்ளது.

தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை வெற்றி மாறன் இயக்கியுள்ளார். இப்படம் ஆயுத பூஜை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் திகதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கில் பிரபல ஹீரோவாக இருக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

நோட்டா மூலம் விஜய் தேவரகொண்டா தமிழில் நேரடியாகக் களமிறங்கியுள்ளதால் இவர்கள் இருவரும் இணையவுள்ள திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழில் பிசியாக வலம்வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் மலையாளத்திலும் ஹிந்தியிலும் ஒவ்வொரு படங்கள் மட்டும் நடித்த நிலையில், இப்போது கிரந்தி மாதவ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் ராசி கண்ணா மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். வழக்கமான கதாநாயகி கதாபாத்திரமாக அல்லாமல் நடிப்பதற்குச் சவாலான வித்தியாசமான கதாபாத்திரம் ஐஸ்வர்யாவுக்கு தரப்பட்டுள்ளதாம்.

பிரபல நடிகருடன் இணையும்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]