பிரபல நடிகரின் வீட்டை உடைக்க உத்தரவிட்ட நீதிபதி- காரணம் தெரியுமா?

அரசுக்கு சொந்தமான ஏரி நிலத்தை ஆக்கிரமித்து சொகுசு வீடு கட்டிய நடிகர் ஜெயசூர்யாவின் வீட்டை இடிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அரசுக்கு சொந்தமான ஏரியை ஆக்கிரமித்து தனது வீட்டின் ஒரு பகுதியை கட்டியுள்ளார் பிரபல நடிகர் ஜெயசூர்யா. இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று நீதிபதி உத்தரவின் பேரில் கொச்சி மாநகராட்சி ஊழியர்கள் படகு துறை ஆக்கிரமிப்பை இடித்து அப்புறப்படுத்தினார்கள்.

பிரபல மலையாள நடிகர் ஜெயசூர்யா, கொச்சியில் உள்ள சிலவனூர் ஏரி அருகில் 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பங்களா வீடு கட்டி வசிக்கிறார். வீட்டின் ஓரத்தில் ஏரியை ஆக்கிரமித்து காம்பவுண்ட் சுவரும் தனது படகை நிறுத்த வசதியாக படகு துறையும் கட்டி இருப்பதாக அவர் மீது புகார்கள் கிளம்பின.

இதுகுறித்து சமூக ஆர்வலர் கிரீஷ் பாபு என்பவர் கொச்சி மாநகராட்சி அலுவலகத்திலும், போலீஸிலும் புகார் செய்தார். மாநகராட்சி அதிகாரிகள் ஜெயசூர்யா வீட்டை நேரில் ஆய்வு செய்து ஏரியை ஆக்கிரமிப்பு செய்துள்ளது உண்மை என்று கண்டறிந்தனர். ஆக்கிரமிப்பை அகற்றும்படி அவருக்கு நோட்டீசும் அனுப்பினார்கள். ஜெயசூர்யா அதை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று நீதிபதி உத்தரவுப்படி கொச்சி மாநகராட்சி ஊழியர்கள் அவர் வீட்டின் ஒரு பகுதியையும், ஆக்கிரமிப்பு செய்து படகுதுறை பகுதியையும் இடித்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]