பிரபல சீரியல் நடிகை தற்கொலை மிரட்டலா?

பிரபல சீரியல் நடிகை தற்கொலை மிரட்டலா?

பிரபல சீரியல் நடிகை

போஸ் வெங்கட், சோனியா இவர்கள் இருவரையும் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. சீரியலில் மட்டுமல்ல சினிமாவில் நடித்து வருகிறார்கள். தற்போது சோனியா வெண்ணிலா கபடி குழு 2, தீரன் படத்தில் நடித்து வருகிறார்.

இதில் அவர் ஒருமுறை கணவருக்கு மொட்டை மாடி தண்ணீர் தொட்டியில் ஏறி கையடக்க தொலைபேசியில் மிரட்டல் விட்டாராம்.

இது எதற்காக என்பதை அவர் பத்திரிக்கை பேட்டியில் தெரிவித்துள்ளார்.

“எங்கள் இருவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. நான் சினிமாவிலிருந்து சீரியலுக்கு வந்த நேரம், என் கணவருக்கு ஒரு படத்தில் வெயிட்டான ரோல் கிடைத்தது.

இதற்காக புது கெட்டப் வைத்து நடித்தார். அந்த நேரம் சீரியலில் அதே கெட்டப்பில் நடிக்க சொல்லி அவரை கேட்டார்கள்.

அவர் இல்லை, இது படத்திற்காக வைத்தது, வேண்டுமானால் தொப்பி போட்டு நடிக்கிறேன் என கூறினார்.

ஏற்கனவே அவரை சீரியல் வேண்டாம், சினிமாவில் கவனம் செலுத்துங்கள் என பலமுறை சொல்லியிருந்தேன்.

அவர் கேட்கவில்லை. ஆனாலும் அவரை அப்படியே நடிக்க வைத்து விட்டார்கள் என கேள்விப்பட்டதும் உடனே கையடக்க தொலைபேசியுடன் மொட்டை மாடிக்கு ஓடினேன்.

தண்ணீர் தொட்டியில் ஏறி இயக்குனர், என் கணவர் என மாறி மாறி போன் போட்டு மிரட்டினேன்.

“தொப்பி போட்டு மறுபடியும் ஷூட் பண்ணுங்க. இல்லைனா குதிச்சிடுவேன் என கூறினேன். அப்பறம் நான் சொன்னதை அவர்கள் கேட்டதும் என் முடிவை மாற்றி கீழே இறங்கினேன்” என கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]