பிரபல ஒளிப்பதிவாளர் சுரேஷ்குமார் காலமானார்!

பிரபல ஒளிப்பதிவாளர் சுரேஷ்குமார் நேற்று திடீரென

நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் சத்யராஜ் நடிப்பில் வெளியான படம் ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’. இந்தப் படத்தின் ஒளிப்பதிவாராக பணியாற்றியவர் சுரேஷ்குமார். இவர் திடீரென்று நேற்று மாலை மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

மறைந்த சுரேஷ் குமார் பூனே திரைப்படக் கல்லூரியில் படித்தவர். இவர் படிக்கும் போதே பல தங்கப் பதக்கங்களை வாங்கியுள்ளார். அதோடு இவர் சில திரைப்பட நிறுவனத்திலும் வேலை செய்துள்ளார். இவருடைய இறுதி ஊர்வலம் இன்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற இருக்கிறது.

சுரேஷ் குமாரின் மரண செய்தியை அறிந்த சினிமா பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]