பிரபல இலங்கை நடிகை கைது

இலங்கை நடிகை

பிரபல நடிகை தீபானி சில்வா கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்டாரகம பகுதியில் வைத்து அவர் பயணித்த மோட்டார் வாகனம் முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதி இன்று (28) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த குழந்தை படுகாயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தீபானி சில்வாவை இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]