பிரபல இயக்குனரின் கைவண்ணத்தில் ஜெயலலிதாவின் திரைப்படம்.

 

பிரபல இயக்குனரின் கைவண்ணத்தில் ஜெயலலிதாவின்  திரைப்படம்.

ஆறு முறை தமிழக முதல்வராக பொறுப்பேற்று தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல முன்னேற்றமான திட்டங்களை கொண்டு வந்த ஜெயலலிதா, கடந்த மாதம் 5ஆம் திகதி  கோடிக்கணக்கான தமிழக மக்களை தவிக்க வைத்துவிட்டு மரணமடைந்தார். அவர் மரணம் அடைந்து ஒரு மாதம் ஆகியும், மக்கள் இன்னும் ஆழ்ந்த துயரத்திலிருந்து  மீளவில்லை.

இந்நிலையில் பிரபல இயக்குனர் தாசரி நாராயண ராவ், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு அடங்கிய  திரைப்படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைக்கதை அமைக்கும் பணிகளை அவர் தொடங்கிவிட்டதாகவும், இந்த படத்திற்காக அவர் ‘அம்மா’ என்ற தலைப்பை  பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகவுள்ள இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில்  யார் நடிப்பார்கள் என்பதை அவர் விரைவில் அறிவிப்பார் என்று  தெரிகின்றது.

ஏற்கனவே த்ரிஷா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.