பிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் நேற்று மதியம் ஹைதராபாத்தில் காலமானார்

பிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் நேற்று மதியம் ஹைதராபாத்தில் காலமானார்

ஆதித்யன்

நடிகர் கார்த்திக் நடித்த, மக்கள் மனதில் இடம்பிடித்த நீங்கா இடம்பிடித்த சூப்பர் டுப்பர் ஹிட் பாடல்களான ” அமரன் ” படத்திற்கு இசையமைத்தவர் பிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் (வயது 63).

இவர் சிறுநீரக கோளாறு காரணமாக ஹைதராபாத்தில் ஒருவாரமாக சிகிச்சை பெற்றுவந்தார், நேற்று மதியம் 11-மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது உடல் நாளை ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு எடுத்துவரப்படும். நாளை மதியம் இறுதி சடங்கு நடைபெறும்.

“அமரனை” தொடர்ந்து நாளைய செய்தி, சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன், அசுரன், மாமன் மகள், சூப்பர் குடும்பம் கடைசியாக கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளார்.இவரது இயற்பெயர் டைடஸ் ( Titus ), மனைவியின் பெயர் ஷோபியா ( Sofiya ), மற்றும் மகள்களான ஷரோன் ( Sharon ), பிராத்தனா ( Prathana ) உள்ளனர். இருவரும் திருமணமாகி ஹைதராபாத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.

Funeral on Thursday afternoon in Chennai .
112, Kennington, Murugan Sulokchana Street, Golden George Nagar, Mogappair East, Chennai 107. Jones- 8668056981.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]