பிரபல அமெரிக்க பாடகியை காதலிக்கும் சவுதி தொழில் அதிபர்!!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி, நடிகை ரிஹானா. 29 வயதான இவர் சவுதி அரேபியாவை சேர்ந்த தொழில் அதிபர் ஹசன் ஜமீலை காதலிக்கிறார்.

உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான அப்துல் லதீப் ஜமீல் நிறுவனத்தின் துணைத் தலைவராக ஹசன் ஜமீல் இருக்கிறார். டொயோட்டா நிறுவன கார்களை அரேபியாவில் வினியோகிக்கும் உரிமை இவருடைய நிறுவனத்திடம் உள்ளது. ஜமீல் குடும்பத்தினர் சவுதியை சேர்ந்த ஜாக்கர் குழுவை சேர்ந்த ஜமீல் பீக்கின் உரிமையாளர்கள்.

பிரபல அமெரிக்க

மிகப்பெரிய கோடீஸ்வரரான ஜமீலுடன் ரிஹானா, நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் படங்களை ஜமீல் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இருவரும் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தமிடும் படங்களும் வெளியாகி உள்ளன. இவர்கள் ஸ்பெயினில் ஒன்றாக சேர்த்து ஓய்வு எடுத்த போது வெளியான படங்கள் இவை.

ரிஹானா முன்பு டிரேக் என்பவரை காதலித்தார். ஹசன் ஜமீல் இதற்கு முன்பு பிரபல மாடல் அழகி நவோமி காம்பெல்லை காதலித்தார். இப்போது ரிஹானா-ஜமீல் இருவரிடமும் புது காதல் அரும்பி இருக்கிறது. இது எவ்வளவு நாளோ? என்று பலர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]