பிரதேச மக்களின் தேவைகளை இணங்கண்டு, அவற்றினை உரிய முறையில் செயற்படுத்தவேண்டும்

பிரதேச மக்களின் தேவைகளை இணங்கண்டு, அவற்றினை உரிய முறையில் செயற்படுத்தவேண்டும்

பிரதேச மக்களின்

யாழ்ப்பாணம்; “நிலையான அபிவிருத்தியும், நிலைபேறான விவசாய அபிவிருத்தியையும்” அடைவதற்கும், பிரதேச மக்களின் தேவைகளை இணங்கண்டு, அவற்றினை உரிய முறையில் செயற்படுத்த அனைத்து உத்தியோகத்தர்களையும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் வேண்டுகோள் விடுத்தார்.

2018 ஆம் ஆண்டிற்கான அரச கரும சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (02.1) யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட2017 ஆம் ஆண்டில் ஆற்றிய சேவையின் அனுபவங்களை வைத்து 2018 ஆம் ஆண்டிலும் சேவையாற்ற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். திட்டங்களை முடிவுறுத்துவதில் வெற்றிகள் தங்கியிருக்கவில்லை. மக்களிற்கு தேவையானவற்றினை வழங்கவும், தேவைகள் உடைய மக்களை இணங்கண்டு மக்களுக்கு உரிய வகையில் சேவைகளை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் மாத்திரமே, எந்த திட்டமாக இருந்தாலும், அந்த திட்டங்கள் வெற்றியளிக்கக் கூடியதாக இருக்கும்.

பிரதேச மக்களின்

எந்த திட்டமாக இருந்தாலும், வறிய மக்களை தேடிச் சென்று அவர்களின் தேவைகளை நிறைவேற்றக் கூடிய வகையில் எமது திட்டங்களை வகுக்க வேண்டும். மக்களின் தேவைகளை அறிவதற்கு அவர்களின் பிரதேசங்களிற்கு சென்று, அவற்றினை இணங்கண்டு சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும். தேவையுடைய மக்களை சென்றடைவதற்குரிய வழி வகையாக இருக்கும்.

கடந்த வருடங்களில் பெற்ற அனுபவங்கள் தான் எதிர்வரும் வருடங்களிலும் சிறப்பாக சேவையாற்ற வழி கோலுகின்றன. 100 வீதம் சிறந்த நேர்மையான மக்களின் தேவைகளை அறிந்து செயற்படுகின்ற ஆண்டாக 2018 ஆம் ஆண்டிலும் உத்தியோகத்தர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
வினைத்திறனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றுவதன் மூலம் தான், எமதும், எமது மாவட்டத்தின் நோக்கங்களையும் அடைய முடியும்.
அரசின் கொள்கைகளை அமுல்படுத்தும் வகையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் செயற்பட்டு மக்களின் வாழ்வாதார தேவைகளையும் வாழ்வியல்களையும் உயர்த்த வேண்டும். யாழ்.மாவட்டத்தில் உள்ள மக்களின் வீட்டுத்திட்டங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கூடிய வகையில், இந்த ஆண்டு அமைய வேண்டும்.
எமது திட்டங்களை உரிய நேரத்தில் நடைமுறைப்படுத்தாவிடின், அந்த செயற்பாடுகளை தவறவிட்டுவிடுவோம்.

பிரதேச மக்களின்

2018 ஆம் ஆண்டில் நிலைபேறான பொருளாதாரத்தினை அடையும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக ஜனாதிபதி செயலகத்தினால் இந்த வருடம் “நிலையான அபிவிருத்தியும், நிலைபேறான விவசாய அபிவிருத்தியும்” எனும் தொனிப்பொருளில், செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அந்தவகையில் 2018 ஆம் ஆண்டில் தரிசு நிலங்களை இணங்கண்டும், ஏற்கனவே, செய்கையிடப்படுகின்ற நிலங்களில் அதிக விளைச்சல் தரக்;கூடிய வகையில், செயற்திட்டங்களை செய்ய வேண்டியுள்ளது.
எமது மக்களிடையே நிலையான விவசாய அபிவிருத்தியைச் செய்வதற்கு எமது உத்தியோகத்தர்கள் அனைவரினதும், வினைத்திறனான, அர்ப்பணிப்புள்ள சேவை மிக முக்கியமானது.

இவற்றினை நடைமுறைப்படுத்த குழுச் செயற்பாடு மிக முக்கியமானது, குழுச் செயற்பாடின்றி எமது எந்த இலக்கினையும் அடைய முடியாது.
அந்தவகையில், 2018 ஆம் ஆண்டில் மக்களுக்கு வினைதிறனான செயற்பாட்டினை முன்னெடுக்கும் வகையில் எமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

பிரதேச மக்களின்

அரசாங்கத்தின் நிலையான விவசாய அபிவிருத்தியில் நாங்களும் எமது மாவட்டம் யுத்தத்தின் முன்னர் இருந்ததைப் போன்று மீண்டும் கொண்டுவர வேண்டும்.

யுத்தத்திற்கு முன்னர் எமது மாவட்டத்தில் விவசாயம் செய்யப்பட்ட நிலங்களை அடையாளம் கண்டு, விவசாய குடும்பங்களிற்கு ஏற்ற தொழில்நுட்ப வசதிகளைச் செய்து கொடுப்பதற்கும் அரச உத்தியோகத்தர்கள் ஆகிய நாம் முனைய வேண்டும். எனவே, அரசின் இலக்கினை அடைவதற்கு அனைத்து உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பும் அவசியம், அந்தவகையில் 2018 ஆம் ஆண்டில் இந்த இலக்கினை அடைவதற்கு அனைவரையும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

பிரதேச மக்களின்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]