பிரதேச சபை சட்டம் திருத்தப்படாத போது எந்த முறையில்

பிரதேச சபை சட்டம் திருத்தப்படாத போது எந்த முறையில் தேர்தல் வந்தாலும் எமக்கு பலனில்லை :சபையில் திலகர் எம்பி.பிரதேச சபை

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு தொகுதி முறையும் விகிதாசார முறையும் இணைந்த கலப்பு முறையில் தேர்தலை நடாத்துவதற்கு யொசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான உடன்பாடு இல்லாமல் இந்த முறையை நாங்கள் வரவேற்கின்ற அதேநேரம் மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு சேவையாற்ற முடியாத பிரதேச சபைகள் சட்டம் திருத்தம் மேற்கொள்ளப்படாதவிடத்து எந்த முறையில் தேர்தல் நடந்தாலும் அது மலையக மக்களுக்கு நன்மை பயக்க போவதில்லை.

எனவே அரசாங்கம் எமது சட்டத்திருத்த கோரிக்கையையும் கூடிய விரைவில் நிவர்த்திக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்ற திருத்தச்சட்டம் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இன்று சபையில் விவாதிக்கப்படும் சட்டத்திருத்தம் தொடர்பில் அனைவரதும் கவனம் உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடாத்துவதற்கு ஏற்பட்ட தாமதம் மற்றும் அறிமுகப்படுத்தப்படும் புதிய தேர்தல் முறை சம்பந்தமானதாக இருக்கிறது. நாங்கள் அது குறித்தும் கவனம் செலத்த வேண்டிய நேரத்தில் இதனோடு தொடர்புடைய இன்னும் இரண்டு விடயங்களையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. ஏற்கனவே, நடைமுறையில் இருந்த தொகுதிவாரி தேர்தல் முறையாக இருக்கட்டும் அல்லது நடைமுறையில் இருக்கும் விகிதாசார தேரதல் முறையாக இருக்கட்டும் அல்லது வரப்போகும் கலப்புமுறை தேர்தலாக இருக்கட்டும். இந்த எந்தவகையான முறையில் தேர்தல் நடைபெற்றாலம் கூட 1987 ஆம் ஆண்டு 15 ம் இலக்க பிரதேச சபைகள் சட்டம் திருத்தப்படாத போது சுமார் பத்துலட்சம் மக்கள் வாழும் பெருந்தோட்ட பகுதிகளில் மக்களுக்கு எந்த பிரயோசனமும் இல்லை.

இதனை; முன்கூட்டியே உணர்ந்தவர்களாக குறித்த பிரதேச சபை சட்டத்தை திருத்துவதற்கான யோசனையை 2015 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானதன் பின்னர் சபை ஒத்திவைப்ப வேளை பிரேரணையாக முன்வைத்திருந்தேன். அந்த பிரேரணையினை ஏற்றுக்கொண்ட துறைக்கு பொறுப்பான அமைச்சர் பைசர் முஸ்தபா சட்டமா அதிபர் திணைக்களத்தினதும் சட்டவரைஞர் திணைக்களத்தினதும் ஆலோசனைகைளப் பெற்று இப்போது திருத்த நகல் கிடைத்திருக்கிறது. அமைச்சர் அதனை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்து அது நிறைவேற்றப்படுகின்றபோதே பெருந்தோட்டங்களில் வாழும் மலையக மக்களுக்கு பிரதேச சபைகளின் மூலம் சேவையை பெற்றுக்கொள்ளும் உரிமை கிடைக்கும்.

அதேபோல நுவரெலியா மாவட்ட மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எமது மாவட்டத்தில் பிரதேச சபைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தேவைப்பாடு எமக்கு இருந்தது. பிரதேச செயலகங்கள் அதிகரிக்கப்படும்போது பிரதேச சபைகள் அதிகரிக்கப்படவேண்டிய கடப்பாடு எழும் என்பதன் அடிப்படையில் பிரதேச செயலகங்களை அதிகரிக்கும் முன்மொழிவைச் செய்திருந்தோம். இந்த விடயம் நுவரெலியா மாவட்ட மட்டத்தில் கலந்துரையாடி அனைத்து அரசியல் தரப்பினரதும் உடன்பாட்டோடு மாவட்டச் செயலாளர் ஊடாக உள்நாட்டு அலவல்கள் அமைச்சுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டது. எனினம் மக்கள் பிரதிநிதி; என்ற வகையில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை நான் முன்வைத்தபோது அந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்கள் அதற்கு உடன்பாடு தெரிவித்த போதும் ஒரு வருடத்திற்கு மேலான காலமாகியும் இன்னும் அதனை நிறைவேற்றவில்லை.பிரதேச சபை

இந்த நிலையில்தான் தற்போது உள்ளுராட்சி மன்ற தேர்தலகள் நடைபெறவுள்ள நிலையில் பிரதேச சபைகளை மாத்திரமேனும் அதிகரிக்கும் அழுத்தத்தை அரசியல் ரீதியாக கொடுத்து நேற்றைய தினம் அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் நடந்த பேச்சுவார்ததையில்p ஐந்து பிரதேச சபைகளை 12 பிரதேச சபைகளாக அதிகரிப்பதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதியினதும் பிரமதரினதும் வழிகாட்டலின்பாடி அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்வதன் ஊடாக அமைச்சர் அதனைப் பெற்றுக்கொடுப்பதற்கு உறுதியளித்துள்ளார்.

பிரதேச சபைஇந்த பின்னணிகளுடனேயே இப்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலகள் சட்டத்திருத்துக்கு நாம் ஆதரவு வழங்க வேண்டியுள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்புடும் வட்டார முறை 2012 ஆம் ஆண்டு சட்டத்திருத்தம் ஊடாக கொண்டுவரப்பட்ட வேளை அமைச்சரவையில் இருந்த எமது பிரதிநிதிகள் இது குறித்து ஏதும் பேசாத நிலையில் அன்று நிறைவேற்றப்பட்டது. அந்த முறையின் கீழ் எல்லை மீள்நிர்ணயம் செய்யப்பட்டபோது அப்போது ஆட்சியில் இருந்த கட்சி தாம் அடிமட்டத்தில் தமது அரசியல் பலத்தை நிரந்தரமாக தக்கவைத்துக்கொள்ளும் வகையில் ஜெரி மென்டரிங் முறையிலேயே மேற்கொண்டது என்பதை நாம் அறிவோம். எனினும் நல்லாட்சி அரசியல் அதனை திருத்துவதற்கு எமக்கு வாய்ப்பு கிடைத்தது. அது முழுமையான திருத்தமாக கொள்ள முடியாதபோதும் செறிவான இடங்களில் வட்டார ரீதியாகவும் செறிவு குறைந்த இடங்களில் விகிதாசார முறை ஊடாகவமவும் எமது இலக்கினை அடைய எண்ணுகின்றோம். அந்த சட்டத்திற்கு அமைவாக மேற்கொள்ளக்கூடிய உச்சபட்ச திருத்தங்களை நாம் சமர்ப்பித்து சாதகமான ஒரு சூழ்நிலையை அடைவதற்கு முடியுமானவைர முயன்றுள்ளளோம். ஏற்கனவே நடைமுறையில் இருந்த விகிதாசார முறையில் நாம் உறுப்பினர்களைத் தெரிவிசெய்தும் கூட மக்களுக்கு சேவையாற்ற முடியாத நிலையில் இருந்தோம் என்ற நிலையில் தற்போது வருகின்ற முறைமைக்குள் நாம் உள்வாங்கப்படல் வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்போடு பிரதேச சபை சட்டத்திருத்ததையும் பிரதேச சபைகளின் எண்ணிக்கை அதிகரிப்பையும் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதி அடிப்படையில் நிறைNவுற்றும் என்ற நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் உள்ளுராட்சி மன்ற திருத்தச் சட்டத்துக்கு எமது ஆதரவினைத் தெரிவிக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]