பிரதேச சபை உப தலைவர் படுகொலை சம்பவத்தில் ஒருவர் கைது

கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் டொனால்ட் சம்பத் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

22 வயதுடைய அசேல ரணசிங்க என்ற சந்தேக நபர், ஊரகஸ்மங்சந்தி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் டொனால்ட் சம்பத் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு நபர்களால் நேற்று சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

சம்பவத்தில் காயமடைந்த மற்றொரு நபர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]