முகப்பு News Local News பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கு உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் உள்ளீர்க்கப்பட வேண்டும் பூ.பிரசாந்தன்

பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கு உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் உள்ளீர்க்கப்பட வேண்டும் பூ.பிரசாந்தன்

பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கு உள்@ராட்சி சபை உறுப்பினர்களும் உள்ளீர்க்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதேச ரீதியாக நடத்தப்படும் அபிவிருத்திக் குழுக்கூட்டங்களுக்கு தவிசாளர்களைத் தவிர உள்ளுராட்சிமண்ற உறுப்பினர்களை அழைப்பதில்லை என்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில தீர்மானத்தினை மீழ்பரிசீலனை செய்து பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கு உள்@ராட்சி சபை உறுப்பினர்கள் உள்ளீர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட செயலகத்திற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெருவித்துள்ளார் மேலும் அக்கடிதத்தில்

உள்@ராட்சி சட்டத்திற்கு அமைய 2018 கலப்பு தேர்தல் முறையின்படி 60மூ சட்ட முறையிலும் 40மூ விகிதாசார முறையிலும் நடைபெற்றது தாங்கள் அறிந்ததே. அதற்கு அமைய வட்டாரம் தொடர்பாக மக்களின் கருத்துக்களை வெளிப்படுத்தும் ஜனநாயகத்தின் குரலாக ஒவ்வொரு வட்டாரத்திற்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் பிரதேச ரீதியாக மக்களின் கருத்துக்களை வெளிக்கொண்டுவரும் விகிதாசார பிரதிநிதிகளும் இருக்கின்றனர்.

குறித்த பிரதேசத்தின் மக்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய சுமையும் உள்@ராட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் இவர்களின் தோளில் சுமத்தப்பட்டுள்ளது.
அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி நகரசபையைத் தவிர ஏனைய அனைத்து சபைகளிலும் எந்தக் கட்சியோ, சுயேட்சைக் குழுவோ அறுதிப்பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சி அமைக்கவில்லை. பல கட்சிகள் அல்லது சுயேட்சை குழுக்கள் சேர்ந்தே புரிந்துணர்வின் அடிப்படையிலேயே ஆட்சி நடைபெறுகின்றமையும், தாங்கள் அறிந்ததே.

இந்நிலையில் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்து தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ள அனைத்து திணைக்கள அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் கலந்து கொள்ளும் பிரதேச அபிவிருத்திக்குழுவில் உள்@ராட்சி சபை உறுப்பினர்கள் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்படுமானால் அவர்கள் எங்கு தாங்கள் சார்ந்த சமூகத்தின் கருத்துக்களை தெரிவிப்பது.

அத்தோடு உள்ளுராட்சி சபைகளுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மட்டும் மக்களின் பிரச்சினைகளல்ல மாகாண,மத்திய, துறைசார் திணைக்களங்கள் மூலம் தீர்வு காணப்பட வேண்டிய பல பிரச்சனைகளை மக்கள் எதிர் நோக்குகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com