பிரதியமைச்சர் வைத்தியசாலையில் அனுமதி

புளத்சிங்கள நகரில் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த பிரதியமைச்சர் பாலித தேவரப்பெரும, தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று தனது (13) உண்ணாவிரதத்தை கைவிட்ட நிலையில், உடல் நலம் மோசமடைந்திருந்ததன் காரணமாக தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தேர்தல் சட்டத்தை மீறி தனது ஆதரவாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் புளத்சிங்கள பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்காமைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள புளத்சிங்கள நகரில் உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் முன்னெடுத்திருந்தார்.