பிரதியமைச்சர் மஸதானுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இந்து சமய விவகார பிரதியமைச்சர் பதவி முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த காதர் மஸ்தானுக்கு வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் பாரிய கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பம்பலப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இன்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்ட குறித்த பேரணி, இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் வரை சென்று அங்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, இந்து சமயத்தைச் சார்ந்த ஒருவருக்கே இந்து சமய விவகார அமைச்சு வழங்கப்பட வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமெழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மேல் மாகாண சபை உறுப்பினர் சண்.குகவரதன், இந்து சமய அமைப்புக்களின் தலைவர்கள், இந்து சமய செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]