பிரதியமைச்சர் பதவியை காதர் மஸ்தான் இராஜினாமா

இந்துமத விவகாரப் பிரதியமைச்சர் பதவியை காதர் மஸ்தான் இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்துமத விவகாரப் பிரதியமைச்சராக, கடந்த செவ்வாய்க்கிழமை காதர் மஸ்தான், சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், இராஜினாமா செய்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், வடக்கு அபிவிருத்தி, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் ஆகியவற்றுக்கான பிரதியமைச்சராக மீண்டும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]