பிரதியமைச்சர் அமீர் அலி உரை

பிரதியமைச்சர் அமீர் அலி உரை

அமீர் அலி

கிழக்கு மாகாணத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தும் தனித்தும் பாரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். மக்கள் அதற்கான ஆணையை வழங்குவார்கள் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் காத்தான்குடி நகர சபைக்கான வேட்புமனுவை இன்று (21) மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இலங்கையில பல பாகங்களிலும் போட்டியிடுகிறது. இது போன்று மட்டக்ளப்பு மாவட்டத்திலும் போட்டியிடுகின்றோம்.

சில பிரதேசங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தும் தனித்தும் போட்டியிடுகிறோம் இது இரண்டு கட்சிகளுக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தின் அடிப்படையில் அம்பாறை மற்ம் திருகோணமலை மாவட்டங்களில் முழுமையாக தனித்தும் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடியி நகரசபைக்கு தனித்தும் ஏனைய பகுதிகளில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கான மனுத்தாக்கலை செய்துள்ளோம்.

எங்களுடைய வேட்பாளர் பட்டியலில் சகல இனங்களைச் சேர்ந்த வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மக்கள் மீது நம்பிக்கை கொண்ட மக்களுக்காக பேசுகின்ற கட்சி என்ற ரீதியில் மக்கள் ஆதரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது: என்றார்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]