பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொதுமக்களிடம் கோரிக்கை

கண்டி மாவட்டத்தை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களின் நிலை அமைதியாக உள்ளது என தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த நிலையில், பொய்யான பிரச்சாரங்களை நம்புவதை தவிர்த்து, பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் நிலவும் நிலைமை தொடர்பில் நேற்று வெளியிட்ட விசேட அறிவித்தலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “கட்டுகஸ்தோட்டையை அண்டிய பகுதியில் சில வர்த்தக நிலையங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. அம்பத்தென்ன பகுதியில் கலகம் விளைக்கும் வகையில் செயற்பட்ட தரப்பினர் வைத்திருந்து கைக்குண்டு ஒன்று வெடித்துள்ளது.

இந்த நிலையில், மதத் தலைவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றபோதும், அவ்வாறு எந்தச் சம்பவமும் இடம்பெறவில்லை. குறித்த பகுதிக்கு மேலதிக பாதுகாப்பு தரப்பினர், பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டின் ஏனைய பகுதிகளின் நிலைமை அமைதியக உள்ளது. தற்போதைய குழப்ப நிலைமையை கட்டுப்படுத்தி, பாதுகாப்பான சூழலை உருவாக்க சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவை வழங்க வேண்டும்” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]