நாடாளுமன்றத்தை கூட்டினால் தேர்தல் பிற்போடப்படும்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட்டினால், உள்ளூராட்சிமன்ற தேர்தலை ஒத்திவைக்கும் நிலைமை ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரத்னஜீவன் ஹூலே இதனை, இன்று கூறியுள்ளார்.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள தினத்தில், பிரதமர் ஏதாவது ஒரு காரணத்துக்காக நாடாளுமன்றத்தை கூட்டினால், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி அல்லது அதற்கு பிறகு வரும் வேறொரு தினத்தில் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்திவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]