பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 25ஆம் திகதி இந்தியா பறக்கிறார்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐந்து நாட்கள் பயணமாக எதிர்வரும் 25ஆம் திகதி இந்தியாவுக்குச் செல்லவுள்ளார்.

திருமண நிகழ்வு ஒன்றுக்காகவே ரணில் விக்கிரமசிங்க ஐந்து நாட்கள் பயணமாக இந்தியா செல்லவுள்ளார். எதிர்வரும் 26ஆம் திகதி புதுடெல்லியில் அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

அன்றைய நாள், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரையும் பிரதமர் சந்தித்துப் பேச்சுகள் நடத்தவுள்ளார்.

திருகோணமலைத் துறைமுக அபிவிருத்தி குறித்த புரிந்துணர்வு உடன்பாட்டின் ஊடாக, எண்ணெய்த் தாங்கிகளை செயற்படுத்தல், இயற்கை எரிவாயு மின் திட்டத்தை உருவாக்கல், நெடுஞ்சாலைகள் அமைத்தல், மற்றும் கைத்தொழில் வலயங்களை உருவாக்குதல் ஆகியன குறித்த இறுதிக்கட்டப் பேச்சுக்கள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், எட்கா உடன்பாடு குறித்தும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்தமாதம் இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள பயணம் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது.

எதிர்வரும் 29ஆம் திகதி நாடு திரும்புவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]