பிரதமர் மற்றும் அமைச்சரவைப் பதவிகளுக்கு இடைக்கால தடை நீடிப்பு!

பிரதமர் மற்றும் அமைச்சரவைப் பதவிகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.தே முன்னணியின் 122 நாடாளுமன்ற உறுப்பினர்களால், பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவிகளின் சட்டத்தன்மையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட கேள்வி விராந்து மனு மீதான விசாரணைகள் ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதுவரையில் அமைச்சரவை  மற்றும் பிரதமர் பதவிக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை அமுலில் இருக்கும் என்று குறிப்பிடப்படுகிறது.

இன்று இந்த மனு மீண்டும் மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அடுத்த வருடம் ஜனவரி மாதம் 16ம், 17ம் 18ம் திகதிகளில் தொடர்ச்சியாக விசாரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]