‘பிரதமர் போட்டியிட்டால் பிரச்சினையில்லை’

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் எந்தவொரு வேட்பாளருக்கும் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாபா அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்க்கும் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவளிக்கப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஊடகவியலாளர் சந்திப்பொன்றை கூட நடத்திக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, டிலான் பெரேரா கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]