பிரதமர் பதவி விலகத் தேவையில்லை- சந்திரிக்கா

ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றிணைந்து மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர் எனவும், பிரதமர் நியமனம் செய்தவர் திருடினார் என்பதற்காக பிரதமரைக் குற்றம் பிடிக்க முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

பிரதமர் நியமித்தவர் திருடினார் என்பதற்கு பிரதமர் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டுள்ளார் தான். அதற்காக பிரதமர் அவருடன் சேர்ந்து திருடினார் என ஆகிவிடாது. இவ்வாறிருக்கையில், பிரதமர் ஏன் பதவி விலக வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]