பிரதமர் பதவி குறித்து ரணில் அதிரடி

ரணில்

அரசியலமைப்பின் பிரகாரம் தான் பிரதமர் பதவியில் தொடர்ந்தும் நீடித்திருப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்கால தலைவர்களை உருவாக்குவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியில் மாற்றங்களை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று மாலை ஆற்றிய விசேட உரையின் போது பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

ஜனவரி 8ஆம் திகதி பெற்ற மக்கள் ஆணையை அவ்வாறே தொடர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மக்கள் தேர்தலில் வழங்கிய பெறுபேறுகளை ஏற்றுக்கொள்வதாகவும், தனக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]