பிரதமர் பதவியை ஏற்குமாறு கோரிக்கை விடுத்தனர்- ராஜித

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்ட போது, பிரதமர் பதவியை ஏற்குமாறு தனக்கு வந்த வேண்டுகோளை தான் மறுத்ததாக சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.

அழுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

2020ஆம் ஆண்டிலும் இதே அரசாங்கம் மீண்டும் ஆட்சியமைக்க நடவடிக்கைககளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.