பிரதமர் பதவியில் தன்னைத் தடுக்கும் இடைக்கால உத்தரவுக்கு எதிராக மகிந்த மேன்முறையீடு

மகிந்த ராஜபக்ச மற்றும் அவர் சார்ந்த அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றால் வழங்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனு இன்று மாலை 3 மணியளவில் தாக்கல் செய்யப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவை மனுதாரராகக் குறிப்பிட்டுள்ள அந்த மனுவில் மேன்முறையீட்டு நீதிமன்றின் இடைக்காலக் கட்டளையை வெற்றும் வெறிதானதாக ஆக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அத்துடன், மேன்முறையீட்டு நீதிமன்றம் அரசியலமைப்புக்கு வியாக்கியானம் வழங்க முடியாது என்றும் அந்த அதிகாரம் உயர் நீதிமன்றுக்கே உள்ளது என்று மனுதாரரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த மனுவை குறைந்த்து 3 நீதியரசர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வே விசாரிக்க முடியும். அதனால் மனு விசாரணைக்கும் எடுப்பது தொடர்பான பிரதம நீதியரசரின் அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]