முகப்பு News பிரதமர் டேவிட் கமரூன் வாக்குறுதி தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் முன்னிற்க வேண்டிய தருணம்

பிரதமர் டேவிட் கமரூன் வாக்குறுதி தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் முன்னிற்க வேண்டிய தருணம்

இலங்கையில் இடம்பெற்ற பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டின்போது, பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் வாக்குறுதியளித்த விடயம் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் முன்னிற்க வேண்டிய தருணம் இதுவாகும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவை தமது டுவிட்டர் தளத்தில் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் கடந்த 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.

இந்த நிலையில், இலங்கை அரசாங்கம் ஜெனிவா தீர்மானங்களை நிறைவேற்றும் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கால வரையறை ஒன்றை நிர்ணயம் செய்ய வேண்டும்.

அதற்கு பிரித்தானிய அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளை வலியுறுத்த வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com