பிரதமர் ஆசனம் மஹிந்தவுக்கா? ரணிலுக்கா? இன்று முடிவை அறிவிக்கும் சபாநாயகர்?

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவி ஏற்ற பின்னர் அவருக்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர்களை சேர்க்க உதவும் பொருட்டு ஜனாதிபதி மைத்திரிபால பாராளுமன்றத்தை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

இந்நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் போது, பிரதமர் ஆசனம் யாருக்கு என்னும் பெருத்த சர்ச்சை எழுந்துள்ளது.

ஆரம்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சபாநயகரிடம் கேட்டுக்கொண்டதுக்கு இணங்க , பிரதமர் ஆசனத்தை மஹிந்தவுக்கு ஒதுக்க சபாநாயகர் கரு ஜெயசூர்ய சம்மதம் தெரிவித்திருந்தார்.

ஆனால் அதன் பின்னர் ஜனாதிபதியின் பாராளுமன்றம் தொடர்பான முடிவுகளில் அதிருப்தி அடைந்த சபாநாயகர் , மஹிந்த பாராளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணிலையே பிரதமராக ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வு தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் கட்சித்தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று மாலை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் பிரதமர் ஆசன ஒதுக்கீடு தொடர்பில் சபாநாயகர் தனது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]