பிரதமரை வெளியேற்ற ஜனாதிபதி விரும்பவில்லை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வெளியேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விரும்பவில்லை, அவருக்குப் பாதுகாப்பு அளித்து வருகிறார் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறிய போது ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

“சட்டமா அதிபரின் ஆலோசனையை எதற்காக கோர வேண்டும், நிறைவேற்று அதிகாரம் இருப்பதை ஜனாதிபதி மறந்து விடக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

“பிரதமரை, ஜனாதிபதி தொடர்ந்து பாதுகாக்கிறாரா?” என்று ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு, “நிச்சயமாக” என்று கூறிய முன்னாள் ஜனாதிபதி, “வேறு யார் அவரை பாதுகாப்பது?” என்றார்.

அத்துடன், “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவரைப் பிரதமராக நியமித்தால், அவர்களுக்குப் பின்னால் இருப்போம் என்று நாங்கள் கூறினோம். ஐதேகவைச் சேர்ந்த ஒரு பிரதமருக்குப் பின்னால் இருக்க மாட்டோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.