பிரதமருக்கு நாடாளுமன்றில் விசேட கௌரவம்

நாடாளுமன்றத்தில் நான்கு தசாப்தங்களை பூர்த்தி செய்த பிரதர் ரணில் விக்ரமசிங்க பாராட்டி கௌரவிக்கும் விசேட அமர்வு இன்று இடம்பெற்றது.

சபை அமர்வுகள் தொடங்குவதற்கு முன்னர் சபாநாயகர் கரு ஜயசூரியவின் வழிகாட்டலில் போதி பூஜை இடம்பெறும்.

நாடாளுமன்ற அமர்வு முற்பகல் 10.30க்கு தொடங்கியது. நாடாளுமன்ற வளாகத்திலுள்ள அரச மரத்திற்கு அருகில் காலை 9.15க்கு போதிப் பூஜை நடைபெற்றது.

மக்கள் பிரதிநிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கைக்கு 40 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு சகல மாவட்ட செயலகங்களிலும், பிரதேச செயலகங்களிலும் சமய கிரியைகள் இன்று இடம்பெற்றதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விசேட கௌரவிப்பு நிகழ்வில் அரச தரப்பு உட்பட ஜே.வி.பி. மற்றும் கூட்டு எதிரணியினரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]