பிரதமருக்கு எதிரான பிரேரணை மீதான விவாதம் ஆரம்பம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, சபையில் சமர்ப்பித்தார்.

அதனையடுத்து, காலை 9.30 மணியளவில் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் ஆரம்பமானது.

இந்த விவாதம் இரவு 9.30 வரை நடைபெறவுள்ளதுடன், 9.30 மணிக்கு பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த மாதம் 21ஆம் திகதி பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]