பிரதமருக்கு எதிரான பிரேரணை கூட்டமைப்பின் முடிவு இன்று

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று முடிவெடுக்கவுள்ளது.

இன்று காலை கூட்டமைப்பு இதுபற்றி முடிவெடுத்து அறிவிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அதேவேளை, இன்று பிற்பகல் நடக்கவுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே, நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.