பிரதமருக்கு எதிரான பிரேரணை; கூட்டமைப்பு ஏப்ரல் 2இல் தீர்மானிக்கும்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, எதிர்வரும் ஏப்ரல் 2ஆம் திகதி முடிவு செய்யப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

“கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் எதிர்வரும் ஏப்ரல் 2ஆம் திகதி நடக்கவுள்ளது. அந்தக் கூட்டத்தில் கட்சியின் முடிவு எடுக்கப்படும்.” என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.