பிரதமரின் பாதுகாவலராக மாறியுள்ள சூர்யா

பிரதமரின் பாதுகாவலராக மாறியுள்ள சூர்யா

செல்வராகவன் இயக்கத்தில் ‘என்ஜிகே’ படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்ததாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் பிரதமரின் பாதுகாவலராக மாறியிருக்கிறார்.

இப்படத்தில் மோகன்லால், சாயிஷா, ஆர்யா நடிப்பில் இன்னும் பெயரிடப்படாத படமாக இது உருவாகி வருகின்றது.

கே.வி.ஆனந்த் படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடப்பதால் என்ன கதை என்பது இதுவரை தெரியாமல் இருந்தது.

இந்நிலையில், மோகன்லால் பிரதமராக நடிப்பதும் அவரது பாதுகாவலராக சூர்யா நடிப்பதும் அண்மையில் வெளியான ஒரு படம் மூலம் உறுதியாகி இருக்கிறது.

செல்வராகவன் இயக்கத்தில் அரசியல் படத்தில் நடிக்கும் சூர்யா அடுத்தும் அரசியல் தொடர்பான கதையில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]