பிரதமரிடம் பிச்சை கேட்டு வெளியில் வரவேண்டிய அவசியம் எனக்கில்லை விமல் வீரசங்ச சூளுரை

பிரதமரிடம் பிச்சைக் கேட்டு வெளியில் வரவேண்டிய நிர்பந்தம் எனக்கில்லை. எனது பிணையில் பிரதமர் பெயரை போட்டுக்கொள்ள முற்படுவது ஒரு கீழ் தரமானச் செயற்பாடாகும். இன்றுமுதல் எனது அதிரடி அரசியல் பயணம் ஆரம்பம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்தார்.

87 நாட்கள் சிறைவாசத்தின் பின்னர் நேற்று கொழும்பு மஜஸ்ரிட் நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டு நேற்று வெளிவிந்த ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் வலியுறுத்தியதாவது,

பிரதமரிடம் பிச்சை கேட்டு
விமல் வீரவங்ச

 

எனக்கு பிணை கிடைக்க பிரதமர் மத்தியஸ்தம் பூண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவ்வாறெனின் இதுவரை காலமும் பிரதமர் தான் என்னை சிறையில் அடைத்து வைத்துள்ளாரா? அவ்வாறெனின் நீதித்துறை சுயாதீனமாகவா இயங்குகின்றது.

எனவே, நீதித்துறை சுயாதீனமாக இயங்குகின்றதா என்பதை பிரதமருக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக கூறப்படும் சட்டத்தரணிகளிடம்தான் சென்று கேட்க வேண்டியுள்ளது.

நீதித்துறைக்கு இவர்கள் செய்துள்ளது பாரிய துரோகமாகும். பிரதமரிடம் பிச்சையெடுத்து பிணை வாங்க வேண்டும் என்ற நிர்பந்தம் எனக்கில்லை. பிரதமரிடம் மட்டுமல்ல ஜனாதிபதியிடம் பிச்சை கேட்க வேண்டிய நிர்பந்தம் எனக்கில்லை.

மூன்று மாதங்கன் நான் சிறை இருந்தது அவர்களின் பிச்சையில் வெளிவருவதற்கில்லை. எனவே, நீதிமன்றில் கிடைத்த பிணைக்கு எவரும் பெயர் பேட்டுக்கொள்ள நினைத்தால் அது ஒரு கீழ்த்தரமான செயற்பாடாகும்.

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நன்றித் தெரிவிக்கின்றேன் மூன்று மாதங்கள் என்னை சிறையில் அடைத்து எனது அரசியல் பயணத்தை கடந்த காலத்தை விட எதிர்காலத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தமைக்கு நன்றியும் தெரிவித்திருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]