பிரதமரிடமிருந்து புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஜனநாயகம் மற்றும் ஒழுக்கநெறிமிக்க நாட்டில் முன்னோக்கி செல்ல வேண்டுமாயின் பல்வேறு பணிகளை நாம் நிறைவேற்ற வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் புதுவருடம் பிறந்துள்ளது.

இந்த இரண்ட வருடங்களில் பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ளோம். தொடர்ந்தும் நாம் பல்வேறு பணிகளை செய்யவேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் பிறந்துள்ள 2017 புத்தாண்டு பரந்த மனப்பாங்கு மாற்றத்துடன், அர்ப்பணிப்போடு செயற்படுவதற்கான தைரியம் மிக்க ஆண்டாக அமைய பிரார்த்திக்கின்றேன். அனைவருக்கும் சிறப்பான நோக்கங்கள் நிறைவேறப்பெறும் புதுவருடமாக அமையட்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.