பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றுள்ள நிலையில் சிற்றுண்டிகள் விலை குறைப்பு

பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றுள்ள நிலையில், உணவுப் பொதியின் விலையை 10 ரூபாவினாலும், தேநீரின் விலையை 5 ரூபாவினாலும் குறைப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.

சங்கத்தின் இணைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்ததாவது,

இந்த விலைக் குறைப்பானது இன்று முதல் நடைமுறைக்கு வரும். இதேநேரம், கொத்து ரொட்டி மற்றும் ப்ரைட் ரைஸ் பொதியின் விலையும் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

பால் தேநீரின் விலை தற்போதைய நிலையிலேயே காணப்படும். இந்த விலைக் குறைப்பை உணவக உரிமையாளர்கள் நடைமுறைப்படுத்துகின்றார்களா என்பது குறித்து ஆராயப்படும்.

என்றும் அதனை நடைமுறைப்படுத்தாத உணவக உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்றார்.

இதேவேளை எரிபொருள் சூத்திரத்தை நீக்கி எரிபொருள்களின் விலையை குறைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டால், முச்சக்கர வண்டிகளின் பயணக் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று இலங்கை சுயதொழில் புரிவோருக்கான தேசிய முச்சக்கர வண்டிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேநேரம் தமது உற்பத்திகளுக்கு விலை குறைப்பு செய்வது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]