முகப்பு Cinema புதிய பிரச்சினையில் சிக்கினார் சிம்பு

புதிய பிரச்சினையில் சிக்கினார் சிம்பு

புதிய பிரச்சினையில் சிக்கினார் சிம்பு

தமிழ் சினிமாவை பொறுத்தவரை அதிகப்படியான சர்ச்சைகளிலும், பிரச்சினைகளிலும் மாட்டிக்கொள்பவர் என்றால் அது நம்ம நடிகர் சிம்பு தான். அந்தவகையில் சிம்பு தற்போது புது பிரச்சினையில் சிக்கியுள்ளார்.

அதாவது, 2013இல் பேஷன் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் சிம்புவை வைத்து படம் எடுக்க முன்வந்துள்ளது.

அதற்காக ரூ 1 கோடி சம்பளம் பேசப்பட்டு முன்பணமாக சிம்புவிற்கு ரூ 50 லட்சம் கொடுக்கப்பட்டது. ஆனால், இன்று வரை இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை, இதற்கு சிம்பு கால்ஷிட் கொடுக்காததே காரணம் என கூறப்படுகின்றது.

தற்போது நீதிமன்றத்திற்கு சென்று பேஷன் மூவி மேக்கர்ஸ் அப்போது ரூ 50 லட்சம் கொடுத்துள்ளோம். எனவே அதற்கு வட்டியாக ரூ 33.50 லட்சம் கொடுக்க வேண்டும்.இல்லையெனில் சிம்புவின் கார் முதல் அனைத்து பொருட்களையும் ஜப்தி செய்யவேண்டும் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சிம்பு 4 வாரத்திற்குள் இதற்கான கடன் பாதுகாப்பை அளிக்க வேண்டும், இல்லையென்றால் அவர் வீட்டில் உள்ள பொருட்கள் பல பறிமுதல் செய்யப்படும்’ என்று கூறியுள்ளார்.

சிம்பு தற்போது செக்கச்சிவந்த வானம், மாநாடு போன்ற திரைப்படங்களை அடுத்து இயக்குனர் சுந்தர்.சியின் படத்தில் பிஸியாகவுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com