பிரசவ வலியால் பெண் பலி

பெண் பலி

பிரசவ வலியால் பெண் பலி

கர்ப்பிணி பெண்ணொருவர் பிரசவத்திற்காக வைத்தியசாலைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ள சம்பவமொன்று தலவாக்கலை ஹொலிரூட் தோட்டம் சந்திரசேகரபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தலவாக்கலை ஹொலிரூட் தோட்டம் சந்திரசேகரபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான சிங்கமூர்த்தி கயானி ( வயது 21 ) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இரட்டைச் சிசுக்களைச் சுமந்திருந்த குறித்த 8 மாதக் கர்ப்பிணிக்கு தனது பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, உறவினர்களால் தோட்ட நிர்வாகத்தின் உதவியோடு அம்புலன்ஸ் வண்டியில் லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனினும், கொண்டு செல்லும் வழியில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இவரோடு இவரின் வயிற்றிலிருந்த இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளன.

இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. லிந்துலை வைத்தியசாலைக்குக் கொண்டு வரும் போதே கர்ப்பிணி இறந்திருந்ததாக லிந்துலை வைத்தியசாலை தெரிவித்தது.

பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி முதித்த குடாகம முன்னிலையில் மரண பரிசோதனையை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் திடீர் மரண பரிசோதனை அதிகாரி டபிள்யு.என். எதிரிசிங்க மேற்கொண்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் உடற்பாகங்கள் சில பரிசோதனைகளுக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரிசோதனைகளின் முடிவுகள் அதன் பின்னரே வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

சடலம், இன்று மாலை உறவினர்களிடம கையளிக்கப்பட்டுள்ளதோடு இது தொடர்பிலான விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]