தேர்தல் காலத்தில் மாத்திரம் சில கட்சிகள் வந்து மதுபானத்தை வழங்கி ஏமாற்றி விட்டு செல்வார்கள்

பிரசன்னா இந்திரகுமார்

தேர்தல் காலத்தில் மாத்திரம் சில கட்சிகள் வந்து மதுபானம், கோழிக்குஞ்சு மற்றும் சில உதவிகளை வழங்கி வாக்குகளை பெற்று மக்களை ஏமாற்றி விட்டு செல்வார்கள் என முன்னாள் கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வாகனேரி வட்டாரத்தில் போட்டியிடும் த.கிருபைராசா என்பவரின் அலுவலகம் வாகனேரியில் இன்று திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-

தமிழ் தேசிய கூட்டமைப்பானது மாவீரர்களால் உருவாக்கப்பட்டது. இவர்களின் கணவை நனவாக்குவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு கொள்ளைக்காக இருக்கின்றது. எமது போராளிகள் எதனை நோக்காக கொண்டு தங்களது உயிர்களை தியாகம் செய்தார்களோ அவர்களது கணவை நனவாக்கி மக்களுக்கு விடுதலை கிடைக்கவே நாம் போராடுகின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து உங்களுடைய தலைவர்களை தெரிவு செய்வீர்களானால் அவர்களின் ஊடாகவே பல்வேறு உதவிகளை எங்களிடம் இருந்தும், அவரிடமிருந்தும் இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும்.

தற்போது சிலர் வாக்கு கேட்பதற்கு மாத்திரம் வருவார்கள். ஆனால் ஏதும் இன்னல்களும் வரும் போது அரசாங்கத்துடன் தட்டிக் கேட்கக் கூடிய கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புத் தான்.

மற்றைய கட்சியின் அவ்வாறு அல்ல தேர்தல் காலத்தில் மாத்திரம் வந்து மதுபானம், கோழிக்குஞ்சு மற்றும் சில உதவிகளை வழங்கி வாக்குகளை பெற்று ஏமாற்றி விட்டு தங்களுடைய நலன்சார்ந்த விடயங்களை செய்து விட்டு செல்வார்கள்.

நீங்கள் இந்த மண்ணுக்காக பல உயிர்களை, சொத்துக்களை கடந்த அரசாங்க காலத்தில் இழந்துள்ளனர். இன்னும் இவை நிவர்த்தி செய்யப்படவில்லை. இவைகளை உங்களுக்கு பெற்றுத் தருவதற்கு அரசாங்கத்திடம் தட்டிக் கேட்பவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாத்திரம் தான் என்றார்.