‘பிம்ஸ்டெக்’ அமைப்பின் புதிய தலைவரானார் மைத்திரி

‘பிம்ஸ்டெக்’ அமைப்பின் புதிய தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மைத்திரி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நேபாளத்தில் நடைபெற்ற நான்காவது பிம்ஸ்டெக் மாநாட்டின் இறுதி நாளான இன்று (வெள்ளிக்கிழமை), அதன் தலைமை பதவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி ஐந்தாவது பிம்ஸ்டெக் மாநாடு இலங்கையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வங்காள விரிகுடா வலய நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒன்றியமான ‘பிம்ஸ்டெக்’ அமைப்பின் ஐந்தாவது அரச தலைவர்கள் மாநாட்டின் தலைமைப் பதவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

பிம்ஸ்டெக் மாநாட்டின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிக்கு, அனைத்து அரச தலைவர்களும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் அனுபவம் வாய்ந்த அரச தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் ‘பிம்ஸ்டெக்’ அமைப்பின் நடவடிக்கைகள் பலமாக முன்கொண்டு செல்லப்படும் என நம்பிக்கை எனவும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

தலைமைப் பதவியை பொறுப்பேற்ற பின்னர் விசேட உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால, ‘பிம்ஸ்டெக்’ அமைப்பின் நான்காவது அரச தலைவர்கள் மாநாட்டை மிகவும் வெற்றிகரமாக நடத்தியதற்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

அத்தோடு நேபாளத்திற்கு வருதைதந்த போது அவருக்கு வழங்கப்பட்ட மகத்தான வரவேற்பு மற்றும் உபசரிப்பு தொடர்பிலும் நேபாள அரசாங்கத்திற்கு அவர் தனது நன்றியை கூறினார்.

வங்காள விரிகுடாவை அண்மித்த தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கிடையில் தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்தும் நோக்கில் இம்மாநாடு நடத்தப்பட்டு வருகின்றது.

அத்தோடு, வர்த்தக முதலீடு, தொழில்நுட்பம், சுற்றுலா, மனித வள அபிவிருத்தி, விவசாயம், மீன்பிடி, போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் ஆகிய துறைகளை வலுப்படுத்துவதை நோக்காகக் கொண்டு இம்மாநாடு நடத்தப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

'பிம்ஸ்டெக்' அமைப்பின்

'பிம்ஸ்டெக்' அமைப்பின்

'பிம்ஸ்டெக்' அமைப்பின்

'பிம்ஸ்டெக்' அமைப்பின்

'பிம்ஸ்டெக்' அமைப்பின்

'பிம்ஸ்டெக்' அமைப்பின்

'பிம்ஸ்டெக்' அமைப்பின்

'பிம்ஸ்டெக்' அமைப்பின்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]