பிப். 5ல் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு: 400 காளைகள் பங்கேற்பு

ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக இன்று அவனியாபுர கிராம விழா கமிட்டி கூடி ஆலோசனையில் ஈடுபட்டது. அப்போது, பிப்.5ல் அங்கு ஜல்லிக்கட்டு நடத்துவது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது . மேலும், அங்கு பிப்.5, காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை மேற்படி போட்டிகள்  நடைபெறும் எனவும், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 400 காளைகள் மற்றும் 300 வீரர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

jallikattu

மதுரை மாநகரின் எல்லைக்குள் அவனியாபுரம் அமைந்திருப்பதால், அங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண  மக்கள் அதிகளவில் வருவது வாடிக்கை. மேலும், கடந்த 3 வருடங்களுக்கு பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிகள் அங்கு நடைப்பெறவுள்ளதால், இந்தியா மட்டுமன்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பெருமளவில் அங்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பிப்.1இல் அலங்காநல்லூரிலும், பிப்.2இல் பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.