பிப்ரவரி-14 இந்த ராசிக்காரங்களுக்கு லவ் செட் ஆகப்போகுதாம்- உங்களுக்கு எப்படி பாஸ்

2019 தொடங்கி முதல் மாதத்தில் கிட்டதட்ட பாதி மாதம் முடிந்து விட்டது. உலகம் முழுவதும் புத்தாண்டிற்கு பிறகு மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் விழா என்றால் அது காதலர் தினம்தான். காதலிப்பவர்களுக்கு ஆண்டு முழுவதும் காதலர் தினமாக இருந்தாலும் காதலை சொல்லவும், அதனை ஏற்றுக்கொள்ளவும் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு நாளென்றால் அது காதலர் தினம்தான்.

எந்தவொரு முக்கியமான நாளாக இருந்தாலும் அந்த நாளில் தனக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை அறிய ஆவலாக இருப்போம். அந்த வகையில் இந்த ஆண்டு காதலர் தினத்தில் உங்கள் ராசிப்படி உங்களுக்கு என்ன நடக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிகாரர்கள் ஒரு சக்தி வாய்ந்த உணர்ச்சி வேகத்தை மெதுவாக கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவர்கள். முழு வேகத்துடன் செய்யப்படக் கூடியவர்கள். 2019-ன் அணைத்து மாதங்களிலும், ஆன்மீக விழிப்புணர்வு உங்கள் நிலைய மாற்றக் கூடிய ஒன்றாக இருக்கிறது. உங்களது கவர்ச்சிகரமான ஆளுமை திறன் மேலோங்கி நிற்கும். உற்சாக மனப்பான்மையும், வலுவான சிந்தனையும் மட்டும் தனித்து செயல்படுவதும் உங்கள் உடன் பிறந்தது. ஆனால் நீங்கள் உங்களின் வளர்ச்சியை இன்னும் அடையவில்லை. இந்த புதிய வருடத்தில் காதல் உங்களை தேடி வர காத்திருக்கிறது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் துயரத்தை தாண்டினால் மட்டுமே வெற்றி என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள். அனைத்தும் கடந்து போகும் என்னும் கருத்துடையவர்கள். தைரியம் தான் உங்களின் இந்த வருட பரிசு என்பதால், நீங்கள் மிகவும் ஆற்றலுடன் செய்யப்படுவீர்கள். வேகமான நிகழ்வுகளுக்கு ஏற்ப நீங்கள் செயல்படுவீர்கள். அதன் பலனையும் பெறுவீர்கள். உங்கள் பலம் மந்திர தந்திரங்களையும் எதிர்த்து நிற்கும். பல முரண்பட்ட விஷயங்களுக்காக நீங்கள் உங்களை கட்டாயப்படுத்திக் கொள்வீர்கள். உங்களுக்கு ஒவ்வொரு வயது அதிகரிக்கும் போதும் பல வருட புத்திசாலித்தனத்தை பெறுவீர்கள். இந்த வருடம் முழுமையான சிக்கலுடன் ஒரு ஆழமான நேசம் உங்களை தேடி வர காத்திருக்கிறது.

மிதுனம்

உங்களின் ஓய்வில்லாத ஆன்மா தான் உங்களுக்கு நங்கூரமாக செயல்படுகிறது. விளையாட்டு தனமாகவும், எதையும் எளிதில் விட்டுவிடும் குணமும் உடையவர் நீங்கள். கடந்த காலத்தை பற்றி சிந்தித்து நேரத்தை விரையம் செய்யாதீர்கள். அப்பாவியாக இருந்த வரை போதும். ஒரு தெளிவான பாதை அமைக்க, இந்த 2019 உங்களுக்கு பல மோசமான திருப்பங்களையும், பல அனுபவ பாடங்களையும் கற்றுத் தர காத்திருக்கிறது. உங்களை கவர்ந்திழுக்கும் விஷயங்களும் பல நடக்கவிருக்கின்றன. புயல் போல் வந்த பிரச்சனைகளுக்கு பின் ஒரு அழகான அன்பு உங்களுக்காக காத்திருக்கும் நேரம் இது. அதன் மகிழ்ச்சிக்கும், செல்வத்திற்கும் குறைவில்லாமல் செல்லும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து பிரித்து பார்த்து முடிவெடுக்கும் ஆற்றல் கொண்டவர்கள். சிறந்த பேச்சு திறமை கொண்டவர்கள். இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறான மகிழ்ச்சியை கொடுக்க காத்திருக்கிறது. இந்த வருடம் ஒரு அன்பான அழகான இதயம் உங்களை தேடி வரப் போகிறது. உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை இந்த காதலர் தினத்தில் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்

சிங்கம் கர்ஜிக்க வேண்டிய நேரமிது. உங்கள் முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கப்போகும் நேரமிது. கம்பீரத்தின் அடையாளமான உங்களுக்கு இந்த காதலர் தினத்தில் இருந்து உங்கள் வாழ்க்கையில் அசாதாரண மாற்றங்கள் ஏற்படும். உங்களின் அடிபட்ட இதயத்திற்கு மருந்தாக பல சம்பவங்கள் நடக்கப்போகிறது. உங்கள் மனதை அமைதிப்படுத்தக்கூடிய உறவு உங்களை தேடிவர வாய்ப்புள்ளது.

கன்னி

நீங்கள் விரும்பும் தூரத்தில் இருக்கும் ஒரு உறவை தொடர்புகொள்ள முயலுங்கள். உங்கள் மனதை காயப்படுத்துவது எது என்பதை கண்டறிந்து அதை உங்கள் வழியில் அகற்ற முயலுங்கள். உங்களின் கடந்த காலத்தை விட்டு வெளியே வாருங்கள், 2019ல் உங்களுக்கு புகழ் தேடிவரும். புதிய உறவை உருவாக்க முயல வேண்டாம், அதற்கு பதிலாக உங்களின் பிரிந்த உறவை சரிசெய்ய முயலுங்கள்.

துலாம்

நீங்கள் விரும்பவில்லை என்றாலும் காதல் நீங்கள் சுவாசிக்கும் காற்றில் உள்ளது. கடந்த கால போராட்டங்களை உங்கள் ஆன்மீக தேடல் சரிபண்ணும். 2019ல் மகிழ்ச்சியாக இருப்பது உங்கள் கையில்தான் உள்ளது, உங்கள் வாழ்க்கையில் வசந்தம் மலர போகிறது,நண்பர்களால் குதூகலமாக இருப்பீர்கள். இந்த காதலர் தினம் நீங்கள் விரும்பும் பரிசை உங்களுக்கு கிடைக்கச்செய்யும்.

விருச்சிகம்

இந்த காதலர் தினம் உங்களுக்கு செல்வத்தை சேர்ப்பதாக இருக்கும். நீங்கள் விரும்பாவிட்டாலும் உங்களின் கர்மயோகம் உங்களுக்கு காதலை மலரச்செய்யும். இந்த காதலர் தினம் உங்களுக்குள் தன்னம்பிக்கையை அதிகளவில் மலரச்செய்யும். சவால்களையும், போராட்டங்களையும் சந்திக்க தயாராகுங்கள்.

தனுசு

இந்த காதலர் தினம் பல தீவிரமான மாற்றங்களை கொண்டுவர கூடியதாக இருக்கும். புதிய நண்பர்கள் பலர் கிடைப்பார்கள். நியாயமற்ற விசாரணைக்கு உட்படுத்த படுவதாக நீங்கள் சிலசமயம் உணருவீர்கள். நீங்கள் தனியாக இருக்கக்கூடாத நேரமிது. சோதனைகள் சூழ்ந்தாலும் உங்களுக்கு தேவையான உண்மையான அன்பு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மகரம்

சில மோசமான உறவுகளாலும், பாடங்களாலும் பலரும் உங்களை தவிர்த்திருப்பார்கள். எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்பும் உங்களுக்கு சாதகமான சூழல் இனிமேல் உருவாகும். உங்கள் வாழ்வின் இருள் சூழ்ந்த பகுதி முடியும் நேரமிது. இழந்த உறவுகளுடன் சேர்த்து புதிய உறவுகளும் கிடைக்கும்.

கும்பம்

அனைவரின் கவனமும் உங்களை நோக்கி திரும்பப்போகிறது. உங்களின் வித்தியாசமான குணமும், ஆற்றலும் நீங்கள் விரும்பிய புகழை உங்களுக்கு கிடைக்க வைக்கும். அதிக பயணங்கள் உங்களுக்கு புதிய புத்துணர்ச்சியை வழங்கும். உங்கள் மனம் விரும்புபவருடன் பயணம் செய்வது அதன் பலனை அதிகரிக்கும். உறவுகளில் ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும் உங்கள் காதலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

மீனம்

நிரந்தரமான, தூய்மையான அன்பு உங்களுக்கு கிடைக்க போகிறது. உங்கள் இதயம் என்ன சொல்கிறதோ அதை செய்யுங்கள். உங்களின் கடந்தகால கசப்புகளுக்கும்,காயங்களுக்கும் உங்களின் புதிய உறவு மருந்தாக இருக்கும். இதுவரை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பயணிக்காத ஒரு வழியில் பயணம் செய்வது உங்கள் வாழ்க்கைக்கு நல்லது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]