பின்தங்கிய கிராமப்புற யுவதிகளுக்கு உதவித்தாதியர் பயிற்சி

பின்தங்கிய கிராமப்புற யுவதிகளுக்கு உதவித்தாதியர் பயிற்சி.

உதவித்தாதியர் பயிற்சி

மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் பின்தங்கிய கிராமப் புறங்களிலுள்ள சாதாரண தரம் மற்றும் உயர்தரம் கற்றுவிட்டு வேலை வாய்ப்பற்றிருக்கும் யுவதிகள் 29 பேருக்கு உதவித் தாதியருக்கான மேலதிக செயன்முறைப்பயிற்சி புதன்கிழமை (04.10.2017) ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலையில் வழங்கப்பட்டதாக அதன் பொது முகாமையாளர் எம்.எல். அப்துல் லத்தீப் தெரிவித்தார்.

தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலகப் பிரிவின் வாகரை மற்றும் பனிச்சங்கேணியைச் சேர்ந்த 5 பேரும் திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த இலங்கைத்துறை முகத்துவாரம், கல்லடி, புன்னையடி மற்றும் ஈச்சிலம்பற்றைச் சேர்ந்த 24 பேருமாக மொத்தம் 29 யுவதிகள் 7 மாதங்களுக்கான உதவித்தாதியர் பயிற்சியைப் பெறுகின்றனர்.

இந்த வறிய குடும்பங்களைச் சேர்ந்த யுவதிகளுக்கு வேர்ள்ட் விஷன் லங்கா திருகோணமலை தெற்கு அபிவிருத்திப் திட்டம் மற்றும் வாகரை சமூர்த்திப் பிரிவு ஆகியவை அனுசரணை வழங்குகின்றன.

அதேவேளை மட்டக்களப்பிலுள்ள இரீடோ (நுசுநுநுனுழு ஏ.வு.ஊயுஆPருளு) தொழிற்பயிற்சி நிறுவனம் இந்த உதவித்தாதியருக்கான உட்கள மற்றும் வெளிக்கள பிரயோகத் தொழிற்பயிற்சி நெறிகளை வழங்கி வருகின்றது.
இப்பயிற்சி நெறியின்போது உதவித் தாதிய தொழிற்துறை சம்மந்தமான விடயங்கள், மருத்துவ உபகரணங்கள் தொடர்பான விளக்கங்கள் பிரயோக செயற்பாடுகள் என்பனவும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலை பொது முகாமையாளர் எம்.எல்.அப்துல் லத்தீப், இரீடோ தொழிற்பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் ரீ. மயூரன், நிர்வாகம் மற்றும் நிதி அலுவலர் எம்.ஏ நிலக்ஷனா, பயிற்சிநெறிப் போதனாசிரியர்கள், தாதியர்கள் மற்றும் உதவித்தாதியர் மாணவிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

உதவித்தாதியர் பயிற்சிஉதவித்தாதியர் பயிற்சிஉதவித்தாதியர் பயிற்சிஉதவித்தாதியர் பயிற்சிஉதவித்தாதியர் பயிற்சிஉதவித்தாதியர் பயிற்சிஉதவித்தாதியர் பயிற்சிஉதவித்தாதியர் பயிற்சி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]