பிணை முறிகள் மோசடி : ஜனாதிபதி ஆணைக்குழு ரவியிடம் இன்று விசாரணை

மத்திய வங்கியில் இடம்பெற்ற நிதிமோசடி குறித்து ரவி கருணாநாயக்கவிடம் விசாரணைகள் மேற்கொள்ள ஜனாதிபதியின் விசேட ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு பெப்ரவரி 27ஆம் திகதி மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறிகள் விநியோகத்தில் சட்டவிரோதமான முறையில் அப்போதைய மத்திய வங்கியின் ஆளுனராவிருந்த அர்ஜுன மகேந்திரனின் மருமகனின் நிறுவனமாக பேச்சுவல் நிறுவத்திற்கு முறிகள் விநியோகிக்கப்பட்டதால் மத்திய வங்கிக்கு 1200 இழப்பு ஏற்பட்டது.

கணக்கெடுப்பின்படி 18 மாதகாலப்பகுதியில் 1600மில்லியன் ரூபா மேற்படி முறிகள் விநியோகத்தல் பேச்சுவல் நிறுவனம் இலாபமாக பெற்றுள்ளதாக புள்ளவிபரப்படுத்தப்பட்டுள்ளது. பிணை முறிகள் சட்டவிரோதமாக விநியோகிவிக்கப்பட்டதை நாடாளுமன்ற கோப் குழுவும் ஊர்ஜிதப்படுத்தியிருந்தது.

குறித்த விடயம் தொடர்பில் ஆறுமாதகால விசாரணையை மேற்கொண்டுவரும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் குறித்த முறிகள் விநியோகத்ததுடன் தொடர்புடை மத்திய வங்கியின் ஊழியர்கள் என பலதரப்பிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள சூழலில் இன்றைய தினம் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

ஜனவரி எட்டாம் திகதி ஆட்சிமாற்றம் ஏற்பட்டது முதல் கடந்த ஜுன் மாதம்வரை ரவி கருணாநாயக்கவே நிதியமைச்சராக செயற்பட்டிருந்தார். இதன் காரணமாகவே விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]